அதிகாலை விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு!

அதிகாலை விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு!

அதிகாலை விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு!

வென்னப்புவ – நயினைமடு பாலத்திற்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தின்போது, விபத்துக்குள்ளான காரிலிருந்து வெளிநாட்டு துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – சிலாபம் வீதியில் வென்னப்புவ, நைனமடம் பாலத்திற்கு அருகில் கார் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிலாபம் நோக்கி பயணித்த கார் ஒன்று, முன்சென்ற கூலர் வாகனத்துடன் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த காரின் கதவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே 8 மில்லி மீற்றர் நீளமான தோட்டாக்கள் பாவிக்க கூடிய இந்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் தவிர்ந்த ஏனைய மூவரில் இருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், ஏனையவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 24, 32, 26, 34 மற்றும் 36 வயதுடைய வென்னப்புவ மற்றும் காலியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts