
வெளியே வீரம்… உள்ளே வெள்ளந்தி… ‘தூக்குதுரை’ அஜித் – எக்ஸ்க்ளூசிவ் ‘விஸ்வாசம்’!
“ படத்தை ஆரம்பிக்கும்போதே ஒரு ஜாலியான எமோஷனலான திருவிழாப் படமாதான் இருக்கணும்னு அஜித்சார், தயாரிப்பாளர் தியாகராஜன், நான் மூணுபேரும் முடிவு பண்ணிதான் இறங்கினோம்.
தேனி மாவட்டத்துல கொடுவிலார்பட்டி கிராமத்துல நடக்கிற கதை இது.
வெளியே வீரமாகவும், உள்ளுக்குள்ளே வெள்ளந்தியாகவும் வாழற மனுஷங்களோட உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் `விஸ்வாசம்’ ” – செம உற்சாகத்தில் ஆரம்பிக்கிறார் சிவா.