மைத்திரியை மனநல சோதனைக்குள்ளாக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

மைத்திரியை மனநல சோதனைக்குள்ளாக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

ஜனாதிபதிக்கு பைத்தியமா?: மனநல சோதனைக்குள்ளாக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மனநல பரிசோதனை செய்யும்படி இன்று ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தக்சிலா ஜயவர்தன என்பவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று இந்த மனுவை தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கொழும்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி அவருக்கு மனநல சிகிச்சை தேவையா இல்லையா என்பதை அறிய அறிக்கையொன்றை கோரும் மண்டமஸ் ரிட் ஆணையொன்றை பிறப்பிக்குமாறு அவரது மனுவில் கோரப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஒரு பகுதியனரால் ஜனாதிபதி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த மனு பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts