பிரேசிலில் வங்கிக் கொள்ளை ; 12 பேர் சுட்டுக்கொலை

பிரேசிலில் வங்கிக் கொள்ளை ; 12 பேர் சுட்டுக்கொலை

பிரேசிலில் வங்கிக் கொள்ளை ; 12 பேர் சுட்டுக்கொலை

பிரேசில் நாட்டில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் சியரா மாநிலம் மிலாக்ரஸ் நகரின் பிரதான சாலையில் பல்வேறு வங்கிக் கிளைகள் மற்றும் ஏ.டி.எம் மையங்கள் அமைந்துள்ளன.

நேற்று அப்பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளைக் கும்பல், வங்கிகளுக்குள் சென்று கொள்ளையடிக்க முயன்றது. ஏடிஎம் மையங்களையும் உடைக்க முயற்சித்துள்ளனர்.

அது குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று, கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

கொள்ளையர்களும் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் அங்கிருந்து தப்பிச் செல்லும் முயற்சியாக, பொதுமக்கள் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்தனர்.

பின்னர் பொலிஸாரின் தாக்குதல் தீவிரமடைந்ததால் பிணையக் கைதிகளை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பி சென்ந நிலையில் அவர்களை சுற்றி வளைத்து பொலிஸார் துப்பாக்கியால் சுட்டனர்.

சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சண்டையில் 6 பிணைக் கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்த நிலையில் . 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் விட்டுச் சென்ற ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சில கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts