நாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது!

நாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது!

நாட்டில் ஏற்பட்ட 49 நாட்கள் நெருக்கடி நிலை தீர்ந்தது!

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியில் இருந்து 49 நாட்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த நெருக்கடி நிலைமை தற்போது முற்றுபெற்றுள்ளது.

அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து நாட்டில் பெரும் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டிருக்கவே, நாடாளுமன்ற அமர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அத்தோடு கட்சி தாவல்களும் இடம்பெற்றன.

113 என்ற பெருமைப்பாண்மையை நிரூபிப்பதில் தொடர்ந்தும் மஹிந்த மற்றும் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவு காணப்பட்டது.

இதன் காரணமாக புதிய அமைச்சர்களை நியமித்ததுடன், நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணியினர் உச்ச நீதிமன்றத்தில் நாடாளுமன்றத்தை கலைத்தமை சட்டவிரோதமானது என தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதன் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு உச்ச நீதிமன்றத்தால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக கூட்டப்படாமல் இருந்த நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் மீண்டும் கூட்டப்பட்டது.

இதனால் நாடாளுமன்றத்தில் பதற்றம் நிலவியிருந்ததுடன் இரு கட்சி உறுப்பினர்களும் நாடாளுமன்ற அமர்வினை குழப்பி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்ற மற்றய அமர்வுகளை புறக்கணிக்க மஹிந்த மற்றும் மைத்திரி அரசாங்க தரப்பினர் தீர்மானித்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியால் இரு நம்பிக்கையில்லா பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தொடர்ந்தும் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில், பிரதமர் அலுவலகத்திற்கு சட்டவிரோதமாக நிதி செலவிடப்படுவதாக தெரிவித்து பிரேரணை கொண்டுவரப்பட்டு பெரும்பாண்மை வாக்குகளுடன் அது நிறைவேற்றப்பட்டது.இதனால் பிரதமர் அலுவலகதிற்கான நிதி இரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இடைக்கால உத்தரவு தொடர்பிலான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டது.

அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமாக செயற்பட்டார் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனை அடுத்து பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து மஹிந்த ராஜபக்ஷ மற்றும் உறுப்பினர்களால் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் இடைக்கால தடை நீடிக்கப்பட்ட தீர்ப்பு வெளியானது.

இதனை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று (சனிக்கிழமை) விசேட உரையை ஆற்றிய பின்னர் பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 5 ஆவது முறையாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக்கொள்ளவுள்ளார் இந்த நடவடிக்கையுடன் நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் ஸ்திரமற்ற நிலையும் முடிவுக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts