திராவிடத்தில் கலவரம் உண்டாக்க எச்.ராஜாவின் எச்ச வேலை!

திராவிடத்தில் கலவரம் உண்டாக்க எச்.ராஜாவின் எச்ச வேலை!

திராவிடத்தில் கலவரம் உண்டாக்க எச்.ராஜாவின் எச்ச வேலை!

தமிழகத்தில் உள்ள கேவலமான அரசியல்வாதிகளில் முக்கியமானவர் எச்.ராஜா என்று இணையவாசிகள் பலர் தெரிவித்து வரும் நிலையில், மீண்டும் அவர்களின் கோவத்திற்கு எச்.ராஜா ஆளாகியுள்ளார்!

உயர்நீதி மன்றத்தைப் பற்றி ஆவேசமாகப் பேசி இணையத்தில் வைரலான எச்.ராஜா, உயர் நீதி மன்றத்தின் கோவத்திற்கு ஆளாகிக் கொஞ்ச நாள் வாயை அடக்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று திமுக எம்.பி கனிமொழி, ட்விட்டரில் “உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்!” என்று மத்திய அரசின் கவன குறைவை குத்திக்காமிது ஒரு ட்வீட் செய்திருந்தார்.

இந்த டீவீட்டுக்கு அர்த்தம் புரியாமல், எச்.ராஜா கனிமொழியை டேக் செய்து “குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக் கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா” என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

மக்களின் நிலையைப் பற்றி கனிமொழி பேசினால், மீண்டும் தமிழகத்தில் சிலையை வைத்து கலவரம் செய்யப் பார்ப்பதாக எச்.ராஜா மீது பல இணையவாசிகள் கோபத்தில் திட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான உயிருள்ள ஆட்களிடம் பெரியார் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.. இருப்பார்..
அவர் சிலைகள் நிறுவி இருப்பது உங்களை போல உள்ள ஆட்களை ஜஸ்ட் லைக் பயமுறுத்த…

இவர் இதனுடன் நிறுத்திவிடவில்லை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களின் நிலையை அறிய மக்கள் நீதி மய்யத்தின் நிறுவுனர் கமல் ஹாசன் டெல்டா மாவட்டங்களுக்குச் சென்றிருந்தார்.

அப்போது இணையத்தில் அவர் மக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பல இணையத்தில் பரவியது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் எதையும் எடுக்காமல், கமல் தனிப்பட்ட விருப்பத்துடன் எடுத்த ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில், “இவர் அங்குப் போனது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அல்ல. படம் சூட்டிங் எடுக்க. வெட்கம்” இது மக்கள் ரசிகர்கள் மட்டுமின்றி பலரை கோவப்படுத்தியுள்ளது!

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts