“ஜனாதிபதி சட்டத்தரணியாக கே.வி தவராஜா நியமனம்!

“ஜனாதிபதி சட்டத்தரணியாக கே.வி தவராஜா நியமனம்!

“ஜனாதிபதி சட்டத்தரணியாக கே.வி தவராஜா நியமனம்!

இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமனம் செய்யப்பட்டார்.

யாழ்மாவடடம் புங்குடுதீவு மண்ணுக்கு சொந்தக்காரராகிய கெளரவ கே வி தவராசா அவர்கள் சுமார் 38 வருடங்களாக சட்டத்தரணியாக சேவை ஆற்றியுள்ளார் .

ஜனாதிபதி சட்டத்தரணியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளார்.

25 சட்டத்தரணிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நியமனம் பெற்றனர். இவர்களில் இரு தமிழர்களும் இரு முஸ்லிம் சட்டத்தரணிகளும் அடங்கும்.

சட்டத்துறையில் அனுபவம் கொண்ட தவராசா, பல்வேறு மனித உரிமைகள் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

கொழும்பில் வைத்து 11 தமிழ் மாணவர்கள் கடத்தப்பட்டமை, சிறையில் வாடிய தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் கைதிகள் மற்றும் பல ஊடகவியளாளர்களின் விடுதலைக்காக அயராது உழைத்து விடுதலை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இலங்கையின் முதலாவது பயங்கரவாதச்சட்டத்தின் கீழான குட்டிமணி தங்கத்துரை முதல் லக்ஷமன் கதிர்காமர் வழக்கு வரை 38 வருடகால சட்டத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு என்பது தமிழ் மக்களுகான பாரிய பங்களிப்பாகும்.

திரு கே வி தவராசா அவர்களை நாமும் மனதார பாராட்டி மென்மேலும் இவரது சேவை தொடரட்டும் என வாழ்த்தி நிற்கிறோம்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts