இன்றைய ராசிபலன் 05-12-2018

இன்றைய ராசிபலன் 05-12-2018

இன்றைய ராசிபலன் 05-12-2018

இன்று
‘தினம் தினம் திருநாளே!’

தினப்பலன் டிசம்பர் 5-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.

இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம்
நாள் புதன்கிழமை
திதி திரயோதசி பகல் 1.10 வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் விசாகம்
யோகம் சித்தயோகம்
ராகுகாலம் பகல் 12 முதல் 1.30 வரை
எமகண்டம் காலை 7.30 முதல் 9 வரை
நல்லநேரம் காலை 9.00 முதல் 10.00 வரை/ மாலை 4.45 முதல் 5.45 வரை
சந்திராஷ்டமம் ரேவதி
சூலம் வடக்கு
பரிகாரம் பால்

மேஷம்

மேஷம்: இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாலையில் உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நல்லது. வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷபம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ஆனால், சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

மிதுனம்

மிதுனம்: மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டாகும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கடகம்

கடகம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். சிலருக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு ஏற்படும்.

பிற்பக லுக்கு மேல் எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதில் கவனம் தேவை. அலுவலகத் தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சங்கடம் ஏற்படக் கூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்திலும் கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருப்பது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்

சிம்மம்: உற்சாகமான நாள். எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும்.

வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். இளைய சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தா லும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பது மகிழ்ச்சி தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவுடன் செலவுகளும் ஏற்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி

கன்னி: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

துலாம்

துலாம்: எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வய்ப்பு உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்.

வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரித்தாலும் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம்: தேவையான பணம் இருந்தாலும் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். பயணத்தால் உடல் அசதி உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறு சிறு சலனங்கள் ஏற்படக்கூடும்.

மாலையில் மனமகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் விட்டுக்கொடுத்துச் செல்லவும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் திடீர் செலவுகள் சஞ்சலப் படுத்தும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாளாகத் தேடிய பொருள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு

தனுசு: மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

கணவன் – மனைவிக்கிடை யே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

மகரம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.

உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்

கும்பம்: அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

வெளியில் செல்லும்போது கொண்டு செல்லும் பொருள்களின் மீது கூடுதல் கவனம் இருக்கட்டும். அலுவலகத்தில் அதிகாரிகள் கடுமையாகப் பேசினாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

மீனம்

மீனம்: இன்று எதிலும் பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். குடும்பத்தில் மற்றவர்கள் முரண்டு பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.

சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடுவதால், உடல் அசதி ஏற்படக்கூடும். அலுவலகப் பணிகளை சக ஊழியர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. வியாபாரம் சுமார்தான்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts