இன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன? இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

இன்று நாடாளுமன்றத்தினுள் நடந்தது என்ன? இன்றும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

வாய்மூல வாக்கெடுப்பின் மத்தியில் குழப்பம்! ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்!

பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து வாய்மூல வாக்கெடுப்பினை ஆரம்பித்திருந்தார்.

எனினும் மஹிந்த அணியினர் சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு களமிறக்கப்பட்டிருந்த விசேட பொலிஸாரின் பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து வெளியேறினார்.

நாடாளுமன்றத்தில் பதற்றம் – நாடாளுமன்ற வளாகத்தில் விசேட உலங்கு வானூர்தி!

நாடாளுமன்றம் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் வருகை தந்ததாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு கோரியே அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ஐக்கிய தேசிய கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் மிகவும் அமைதியான முறையில் தங்களது ஆசனங்களில் அமர்ந்துள்ளதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற வளாகத்திற்கு சற்றுமுனனர் உலங்கு வானூர்தி ஒன்று தரையிரங்கியுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் குறித்த உலங்கு வானூர்தியில் வருகை தந்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம்!

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதைன் காரணமாக அங்கு பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்ததுடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்தியுள்ளனர்.

மேலும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் சபைக்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு வலியுறுத்தி அரச தரப்பினர் இவ்வாறு நாடாளுமன்றத்தில் கோஷமிட்டு வருகின்ற நிலையிலேயே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பிலான ஒளிப்படத்தை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காத பட்சத்தில் சபாநாயகர் ஆசனத்தில் அமர்வதற்கு உப சபாநாயகர் அல்லது ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு. ஆனால், இவர்கள் தவிர்ந்த ஏனையோர் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் மன்றிற்கு விஜயம்: பாதுகாப்பு தரப்பு மீதும் தாக்குதல்!

நாடாளுமன்றில் குழப்பமான சூழல் நிலவிவருகின்ற நிலையில், பொலிஸ் பாதுகாப்புடன் சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து குழப்பம் விளைவித்துவந்த ஆளும் தரப்பினர், சபாநாயகர் ஆசனத்தை தூக்கி பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தும் செயற்பாட்டிலும் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. ஆனால், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின்போதும் குழப்பம் நீடிக்க நாடாளுமன்றத்தை எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அதனை தொடர்ந்து இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தையடுத்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாய்மூல வாக்கெடுப்பின் மத்தியில் குழப்பம்! ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்றம்!

பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்திற்கு சபாநாயகர் வருகை தந்து வாய்மூல வாக்கெடுப்பினை ஆரம்பித்திருந்தார்.

எனினும் மஹிந்த அணியினர் சபாநாயகரின் ஆசனத்தை தூக்கிய நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்து விட்டு களமிறக்கப்பட்டிருந்த விசேட பொலிஸாரின் பாதுகாப்புடன் சபாநாயகர் அங்கிருந்து வெளியேறினார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts