2.0 படத்துக்காக எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியுமா?

2.0 படத்துக்காக எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியுமா?

2.0 படத்துக்காக எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியுமா?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் எத்தனை செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படம் ரஜினிகாந்தின் 68ஆவது பிறந்தநாளை (12.12.1950) முன்னிட்டு வெளியாகாமல், இன்று முதல் உலகம் முழுவதும் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து முக்கியமான தகவலை கலை இயக்குனர் முத்துராஜ் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் செல்போன்கள் பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், படப்பிடிப்பிற்கு, பையில் செல்போன்கள் தான் நிறைய எடுத்துச் செல்வோம். செல்போன்கள் வைப்பதற்கு என்று புதிதாக மொபைல் ஸ்டோர் ஒன்றையும் திறந்தோம்.

ஆனால், அவைகள் எல்லாமே டம்மி மொபைல் மாடல்கள். பல்வேறு மொபைல் ஸ்டோர்களில் இருந்து டம்மி மொபைல்களை வாங்கி வந்தோம்.

அதோடு பயன்படாமல் இருக்கும் மொபைல் போன்கள், திரும்ப அனுப்பப்பட்ட மொபைல் மாடல்கள் என்று எல்லாவற்றையும் சேகரிதோம்.

மொபைல் உற்பத்தி செய்யக் கூடிய நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நிறைய பல மொபைல் மாடல்களை வாங்கி வந்தோம்.

இது எங்களுக்கு மறக்க முடியாத புதிய அனுபவம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts