ரஜினி ரசிகர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!

ரஜினி ரசிகர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!

ரஜினி ரசிகர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது – பால் முகவர்கள் சங்கத் தலைவர் பேட்டி

கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து லட்சக்கணக்கான லிட்டர் பாலை வீணாக்கும் தன்னுடைய ரசிகர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யுமாறு ரஜினி அறிவுறுத்த வேண்டும் என்றார் பொன்னுசாமி.

“கட்-அவுட்டுளுக்கு பாலாபிஷேகம் செய்யும் தனது ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் தடுக்காவிட்டால், அவர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’ என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

பொன்னுசாமி, சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் நாளை (நவ.29) வெளிவர உள்ளது. கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து லட்சக்கணக்கான லிட்டர் பாலை வீணாக்கும் தன்னுடைய ரசிகர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்களை செய்யுமாறு ரஜினி அறிவுறுத்த வேண்டும்.

இதுதொடர்பாக கபாலி மற்றும் காலா திரைப்படங்கள் வெளியானபோதே எங்களது சங்கம் சார்பில் வலியுறுத்தினோம். எனினும், அதை ரஜினிகாந்த் கண்டுகொள்ளவில்லை.

கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என ரஜினி தனது ரசிகர்களுக்கு உடனடியாக அறிவுறுத்தவில்லை என்றால், அவரது திரைப்பட வசனம் ஒன்றில் சொல்வது போலவே, ரஜினி ரசிகர்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார் பொன்னுசாமி.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts