பிரபாகரனாக பாபிசிம்ஹா : சர்ச்சைகள் ஆரம்பம்!

பிரபாகரனாக பாபிசிம்ஹா : சர்ச்சைகள் ஆரம்பம்!

பிரபாகரனாக பாபிசிம்ஹா : சர்ச்சைகள் ஆரம்பம்!

‘நீலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கடேஷ் குமார் ஜி. இவர் அடுத்து இயக்கும் புதிய படம் ‘சீறும் புலி’. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் படம் இது.

இந்தப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக அதாவது வேலுப்பிள்ளை பிரபாகரனாக நடிக்கிறார்.

சீறும் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரபாகரனின் 64ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

அதற்குள் சீறும் புலி படம் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன. பிரபாகரன் வேடத்தில் நடிக்க இவர் பொருத்தமாக இல்லை என்று விமர்சனம் எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் தணிக்கையில் அனுமதி கொடுப்பார்களா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts