டெல்லியில் 300 இடங்களில் தீ விபத்து -2 குழந்தைகள் உயிரிழப்பு!

டெல்லியில் 300 இடங்களில் தீ விபத்து -2 குழந்தைகள் உயிரிழப்பு!

டெல்லியில் 300 இடங்களில் தீ விபத்து -2 குழந்தைகள் உயிரிழப்பு!

புதுடெல்லியில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறைக்கு 300இற்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் நேற்று(புதன்கிழமை) தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனைமுன்னிட்டு பொலிஸ் அதிகாரிகளினால் பட்டாசு வெடிக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும், தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட பட்டாசு விபத்து, வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு அதிகமான அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மேலும் தலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வரை தீ விபத்து தொடர்பாக 271 அழைப்புகளும், அதன்பிறகு, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி வரை 74 அழைப்புகளும் கிடைத்துள்ளதாக டெல்லி தீயணைப்புத்துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீ விபத்து குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதார் பஜார் குடிசைப்பகுதியில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாகவும், 2 பேர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts