Breaking News

சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க.வினர் போராட்டம்!

சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க.வினர் போராட்டம்!

சர்கார் திரைப்படத்திற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க.வினர் போராட்டம்!

சர்கார் படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கோரி மதுரை, கோவைப் பகுதிகளில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இப்படத்தில் அரசு கொடுக்கும் விலையில்லாப் பொருட்களை மக்கள் தீவைத்து எரிப்பது போன்ற காட்சிக்கு தற்போது எதிர்ப்பு உருவாகியிருக்கின்றது.

மேலும் இத்திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தி இருப்பதாகத் தெரிவித்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளதுடன், இப்படம் அரசியல் சூழ்நிலையை விவரித்தும், கள்ள ஓட்டு குறித்தும் இயக்கி இருந்தார்.

மதுரையில் சர்கார் திரையிடப்படும் சினிப்பிரியா, மினிப்பிரியா, சுகப்பிரியா திரையரங்குகள் முன் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts