Breaking News

சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு!

சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு!

சத்தீஷ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு!

சத்தீஷ்கரில் தண்டேவாடாவில் மாவோயிஸ்ட்கள் பேருந்து ஒன்றை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

தண்டேவாடாவின் பாசிலி பகுதியில் மத்திய துணை இராணுவப்படையினரை ஏற்றி வந்த பேருந்தை குறிவைத்து மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கண்ணிவெடியை வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில் பொதுமக்களில் மூவரும், பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தனர்.

இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஷ்கரில் எதிர்வரும் 12ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts