கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது!

கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது!

கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது!

கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.

தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது.

கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது, அடுத்த ஒருமணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts