கஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

கஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

கஜா புயலால் தஞ்சாவூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!

கஜா புயலால் தஞ்சாவூரில் சிவக்கொல்லை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து ரமேஷ், தினேஷ், சதீஷ், அய்யாதுரை என்ற 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

கஜா புயல் நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் புயலின் கண்பகுதியின் முதல் பகுதி வேதாரண்யம் அருகே கரையைத் தொட்டது.

மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசியது. இதனால் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காற்றின் வேகம் 111 கிலோ மீட்டர் ஆக பதிவாகியது.

மேலும் கடலோர மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவக்கொல்லை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து ரமேஷ், தினேஷ், சதீஷ், அய்யாதுரை என்ற 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இதில் மூதாட்டி ஒருவரும் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஜா புயலால் பொருட்சேதங்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது தஞ்சையில் 4 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts