உயிரையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணிகளை செய்யும் மின்வாரிய ஊழியர்கள்!

உயிரையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணிகளை செய்யும் மின்வாரிய ஊழியர்கள்!

உயிரையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணிகளை செய்யும் மின்வாரிய ஊழியர்கள்!

மாநகராட்சி, நகராட்சிகளில் ஏற்கெனவே 100 சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து மின் விநியோகம் தொடங்கியுள்ளது. கிராமப்புறங்களில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள், உயிரையும் பொருட்படுத்தாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் தேவைக்கு முழுக்க முழுக்க நம்பியிருப்பது மின்மோட்டார்களையும், பம்புகளையும்தான்.

குடிக்க தண்ணீர் வேண்டும் என்றாலும் நிலத்தடி நீர்தான். இதனால் மின்சாரமின்றி தண்ணீர் எடுப்பது கடினம். ஆனால் கஜா புயலால் ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும், மின் மாற்றிகளும் சரிந்து கிடக்கின்றன.

இதுபோன்ற இக்கட்டான சூழலில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் களப்பணி ஆற்றி வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.

அன்றாடம் ஓடி ஓடி உழைப்பதே ஒரு ஜான் வயிற்றுக்குத்தான் என்று கூறுவார்கள். ஆனால், நாகையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர் ஒருவர், சாப்பிடக்கூட நேரமின்றி, மின்கம்பத்தின் உச்சியில் அமர்ந்தே உணவருந்திய காட்சி பலரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

இதேபோல் வயல்வெளிகளுக்கு நடுவே உள்ள மின் கம்பங்களை மாற்றியமைப்பது சிரமமான காரியம் என்றே கூறலாம்.

ஏனெனில் வயல்வெளிகளில் கடல்போல தேங்கிய தண்ணீரில் மின் கம்பங்களை தூக்கிச் செல்ல வேண்டும். இந்த பணியில் மின் ஊழியர்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர, பல்வேறு இடங்களில் மழையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் மின்வாரிய ஊழியர்கள் ஆற்றி வரும் களப்பணி குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

நாகையில் மின்கம்பங்களை வாகனத்தில் ஏற்றும் ஊழியர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியும், அவரது கட்சியினரும் உதவி செய்தனர்.

மாநகராட்சி, நகராட்சிகளில் ஏற்கெனவே 100 சதவீத சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து மின் விநியோகம் தொடங்கியுள்ள நிலையில், எஞ்சியுள்ள ஊரகப் பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts