இலங்கைக்கு அருகில் தாழமுக்கம்: நாடெங்கும் மழை!

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம்: நாடெங்கும் மழை!

இலங்கைக்கு அருகில் தாழமுக்கம்: நாடெங்கும் மழை; சீரற்ற காலநிலை!

சில பிரதேசங்களில் 150 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு

நாட்டிற்கு அருகாமையில் நிலவும் சிறு தாழமுக்கம் காரணமாக மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பனி மூட்டம் காணப்படுவதுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடி, மின்னல் தாக்கம் ஏற்படும் என்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து பொதுமக்கள் மற்றும் மீனவர்களும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் நிலையம் தெரிவித்தது.

இதற்கிணங்க நாட்டைச் சூழவுள்ள கடற்கரைப் பகுதிகளில் கடும் மழையுடன் காற்றும் வீசுமெனவும் நிலையம் தெரிவித்தது.

நாட்டின் வடக்குத் திசையிலிருந்து 50- – 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இரவு நேரங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடும் மழை பெய்யுமெனவும் மேற்படி நிலையம் எதிர்வு கூறுகிறது.

வடக்கு, வட மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களில் 150 மில்லி மீற்றர் மழை பெய்யும் எனவும், ஏனைய பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் நிலையம் தெரிவித்தது.

வானத்தில் கருமுகில்கள் நிறைந்து காணப்படுவதுடன் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில பகுதிகளில் பனி மூட்டம் காணப்படுமென்றும் தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம் இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts