ஆரம்பமே பெரும் குழப்பம்! மஹிந்தவை உரையாற்ற விடாமல் அனைவரும் கூச்சல்!

ஆரம்பமே பெரும் குழப்பம்! மஹிந்தவை உரையாற்ற விடாமல் அனைவரும் கூச்சல்!

ஆரம்பமே பெரும் குழப்பம்! மஹிந்தவை உரையாற்ற விடாமல் அனைவரும் கூச்சல்!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று கூட்டப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்றுக்கு அனைவரும் வருகைத் தந்துள்ளனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகைத் தந்துள்ளனர்.

இந்த நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவை உரையாற்றுமாறு சபாநாயகர் அறிவித்த நிலையில், தினேஸ் குணவர்தன எழுந்து நேற்று ஜனாதிபதியால் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வாசிக்குமாறு வழியுறுத்தியுள்ளார்.

இதை மறுத்த சபாநாயகர் மஹிந்தவுக்கு உரையாற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு அறிவித்தார்.

எனினும் சபையில் மஹிந்தவை பேச விடாமல் நாடாளுமன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை பொருட்படுத்தாத மஹிந்த தனது உரையை ஆரம்பித்துள்ளார்.

ஆரம்பத்திலேயே கூச்சலிடுபவர்களை பார்த்து திட்டிய மஹிந்த அவர்களைப் பார்த்து நகைச்சுவையாகவும் உரையாற்றியிருந்தார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts