ஆப்கான் இராணுவ மசூதியில் குண்டு வெடிப்பு – 26 பேர் பலி

ஆப்கான் இராணுவ மசூதியில் குண்டு வெடிப்பு – 26 பேர் பலி

ஆப்கான் இராணுவ மசூதியில் குண்டு வெடிப்பு – 26 பேர் பலி

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இராணுவ தளத்தில் அமைந்துள்ள மசூதியில் நேற்று காலை இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கான் இராணுவத்தளம் ஒன்றினுள் அமைந்துள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைகளுக்காக தாக்குதலுக்குள்ளானவர்கள் கூடியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் அனைவரும் ஆப்கான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களெனவும் இராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இத்தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts