ஸ்மாட் தொலைபேசி பயன்படுத்தினால் தலையில் பேன் அதிகரிக்குமா?

ஸ்மாட் தொலைபேசி பயன்படுத்தினால் தலையில் பேன் அதிகரிக்குமா?

ஸ்மாட் தொலைபேசி பயன்படுத்தினால் தலையில் பேன் அதிகரிக்குமா?

இளைஞர்கள் அதிகளவில் ஸ்மாட் தொலைபேசி பாவிப்பதால், பேன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக வைத்திய நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தலைகளில் அரிப்பு ஏற்பட தொடங்கினாலே பேன் வந்துவிட்டதோ என்ற அச்சம் தொற்றிக்கொள்கிறது.

அதிகமாக சிறுவர்கள் மற்றும் இளம் பராயத்தினருக்கே இந்த பேன் தொல்லை அதிகமாகவுள்ளது.

நமது தலைகளில் பேன் எவ்வாறு உருவாகிறது என்னும் சந்தேகம் எல்லோருக்குமே இருக்கும்.

இது தொடர்பில் வைத்திய நிபுணர்கள் கூறுவதென்ன?

ஒருவரோடு ஒருவர் தலையை ஒட்டி வைத்திருக்கும்போது தொற்றுதல் மூலம் பேன் வருகிறது.

அதிகம் தலை வியர்க்கும் தன்மை உடையவர்கள் தலை குளிப்பது குறைவென்றால் பேன் ஏற்படுகிறது.

தலைமுடியை பிண்ணி அல்லது இறுக்கமாக கட்டாவிட்டால், விரித்துப் போடுவதாலம் பேன் வருவதாக கூறப்படுகிறது.

அத்தோடு தலை வறண்டு போகும்போது, எண்ணெய் தன்மை இழந்து போகும் போதுகூட பேன் வந்துவிடுகிறது என்பது வைத்தியர்களின் ஆலோசனை.

இந்த பேன் இனம் தங்கள் கால் நகங்களால் தலையை பற்றிப் பிடித்து கொள்கிறது. அத்தோடு முட்டையிட்டு குஞ்சு பொரித்து கொள்கிறது.

மேலும் இவற்றால் பறக்கவோ அல்லது குதிக்கவோ முடியாது என்பதால் ஊர்ந்து அடுத்தவர்கள் தலைக்கு தாவுகிறது.

எனவே நாம் அவதானமாக இருந்தால், பேன் தொற்றிலிருந்து தப்பிக்கலாம் என்பது வைத்தியர்களின் ஆலோசனை.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts