Breaking News

இந்தோனேஷியா ஜவா தீவில் விபத்து – 21 பேர் பலி!

இந்தோனேஷியா  ஜவா தீவில் விபத்து – 21 பேர் பலி!

இந்தோனேஷியா – ஜவா தீவில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்தமையினாலேயே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அத்துடன், குறித்த விபத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts