Breaking News

அவுஸ்ரேலியாவில் 5 சடலங்கள் கண்டெடுப்பு!

அவுஸ்ரேலியாவில் 5 சடலங்கள் கண்டெடுப்பு!

அவுஸ்ரேலியாவின் பேர்த் மேற்குப் புறநகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலியாவின் புறநகர்ப் பகுதியான பேர்த் நகரில் ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உட்பட ஐந்து சடலங்கள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு அவுஸ்ரேலியாவின் உதவிப் பொலிஸ் ஆணையாளர் பவுல் ஸ்டீல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பொலிஸ் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பவுல் ஸ்டீல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஐவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்களா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த விசாரணையில், 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் பொலிஸாருக்கு உதவி புரிவதாகவும் அப்பகுதி மக்களுக்கு எந்தவித ஆபத்துக்களும் இல்லை என்றும் உதவிப் பொலிஸ் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த மே மாதம்  இதே பகுதியில் ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts