சூரிய மண்டலத்தை நெருங்க தயாராகும் நாசா!

சூரிய மண்டலத்தை நெருங்க தயாராகும் நாசா!

சூரிய மண்டலத்தை நெருங்க தயாராகும் நாசா!

சூரிய மண்டலத்தை நெருங்குவதற்கு நாசா தயாராகி வருகிறது. அதாவது வேறு எந்த விண்கலத்தை விடவும் சூரியனுக்கு மிக நெருக்கமாக விண்கலம் ஒன்றை அனுப்பி ஆய்வு செய்வதற்கு நாசா தயாராகி வருகிறது. நட்சத்திர மண்டலத்தின் மிகப்பெரிய பகுதியை ஆய்வு செய்வதே நாசாவின் திட்டம்.

Parker Solar Probe என்பது ரோபொ விண்கலம். இந்த விண்கலம் எதிர்வரும் 11 ஆம் திகதி புளோரிடா கேப் கனேவரெல்லில் இருந்து ஏவப்படவுள்ளது.

சூரியனின் மேற்பரப்பிலிருந்து 3.8 மைல்கள் தூரத்துக்குள் இந்த விண்கலம் சூரியனின் ஒளிவட்டமாக மாற்றம் பெறும்.

இது தொடர்பாக கருத்துரைக்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர், “நாம் சூரியனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க போகிறோம்.உண்மையில் சூரியனின் துகள்களை தொட போகிறோம்’ என்று தெரிவிக்கிறார்.

கடந்த காலங்களில் ஹீலியஸ்-2 என்ற விண்கல ஆய்வு சூரியனின் மேற்பரப்பிலிருந்து 27மில்லியன் மைல்கள் தூரத்துக்குள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கடந்த 1976 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

சூரிய மண்டலத்தை ஊடுருவிச் செல்லக் கூடிய மின் துகள்களின் தொடர்ச்சியான ஓட்டம் சூரிய காற்றுக்கு வழிவகுப்பதுடன் சூரிய ஒளிவட்டம் சூரியக் காற்றை அதிகரிக்கச் செய்கிறது.

கணிசமான சூரியக் காற்றுகள் நமது கிரகத்தின் காந்த மண்டலத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன, மேலும் பூமியில் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்துடன் அழிவையும் ஏற்படுத்தும்.

இந்நிலையில் சூரிய மண்டலத்தின் நெருங்கிய ஆய்வுக் கண்டுபிடிப்புக்கள் புவியின் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை முன்னறிவிப்பதை சாத்தியமாக்கும் என நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

நாசாவின் இத்திட்டமானது, சூரியனின் காற்றையும், மின் மற்றும் காந்த புலங்களையும், ஒளிவட்ட பிளாஸ்மா மற்றும் ஆற்றல் துகள்களையும் ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூரிய வெப்பத்தை தாங்கும் வல்லமையுடன் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts