இலங்கையில் புலிகளுக்கு புத்துயிர்? இந்திய உளவுத்துறை பிரிவினர் தகவல்!

இலங்கையில் புலிகளுக்கு புத்துயிர்? இந்திய உளவுத்துறை பிரிவினர் தகவல்!

இலங்கையில் புலிகளுக்கு புத்துயிர்? இந்திய உளவுத்துறை பிரிவினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் 5,000 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சித்தகவல் வெளிவந்துள்ளது.

குறித்த டெட்டனேட்டர்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ள நிலையில் உளவுத்துறை பிரிவினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதில், “இலங்கையின், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னாரில், முல்லைத்தீவில் வசிக்கும் தமிழர்களிடம் இராணுவம் கெடுபிடி காட்டி வருகிறது. இது குறித்து வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்க விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க சிலர் முயற்சித்து வருவதாக உளவுத்துறை தெரிவிக்கிறது.

இதற்காக, தமிழகத்தில் இருந்து வெடி பொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.” என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இராமேஸ்வரம் அருகே, புதுரோடு மீனவர் காலனியில் நேற்று முன்தினம் இரவில் பொலிஸார் சோதனை நடத்தினர். அங்கு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் இருந்து கள்ளத்தோணி, வெடிகுண்டு தயாரிக்க பயன்படும், 5,000 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த டெட்டனேட்டர்கள் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கடத்திச் செல்ல இருந்த 5,000 டெட்டனேட்டரில், ஒரு டெட்டனேட்டரிக்கு நான்கு ஜெலட்டின் குச்சி வெடி மருந்து இணைத்து வெடிக்க செய்தால், 2,000 சதுர அடி கட்டடத்தை தகர்த்து விடும் சக்தி உடையது.

இந்த டெட்டனேட்டரை, மதுரை, கோவை, ஆந்திராவில் கல்குவாரி உரிமையாளர்களிடம் சந்தேகநபர்கள் வாங்கியுள்ளனர். எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், கடந்த பல வருடங்களாக இராமேஸ்வரத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும், கடல் அட்டைகள், மருந்து பொருட்கள் தான் கடத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது பெரிய அளவில் வெடிபொருட்கள் பிடிபட்டுஉள்ளது புலனாய்வு துறையினரை அதிர்ச்சிக்குஉள்ளாக்கி உள்ளது.

 

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts