மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் ஊழலும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் ஊழலும்.

ஓய்வு பெற்றுச்சென்றவரால் கட்டியாளப்படும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை.

கடந்த 19/07/2018 உடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நான்கு வருடங்களுக்கு மேலாக பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் இப்றாலெப்பை ஓய்வு பெற்று சென்றுவிட்டார்.

ஆனால் அவரது ஆடிய காலும் பேசிய வாயும் அளைந்த கையும் ஓய்வாக இருக்கவில்லை.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை சம்மாந்துறையில் இருந்தபடி தெறிக்க விடுகிறார்.

சேவை நீடிப்புக்கு விண்ணப்பித்த நிலையில்,வைத்தியர் மதனழகனின் வார்த்தைகளையும்,வைத்தியர் மதனழகனும் வைத்தியர் அகிலனும் சேர்ந்து அமைச்சுக்கு அனுப்பிய கடித்த்தையும் நம்பி தான் மீண்டும் பணிப்பாளராக நியமிக்கப்படுவேன் என்ற நம்பிக்கையில் துடிக்கிறார்.

ஆணியில்,பேணியில்,கம்பியில் ஏன் வாழைப்பழத்தில் கூட திருகுதாள கணக்கெழுதி இலட்சக்கணக்கில் கொள்ளையடித்த இப்றாலெப்பையின் மண்டை, காசை காணாமல் வீங்கி கிடக்கன்றமையே இந்த துடிப்புக்கு காரணம்.

அங்கு தற்போதைக்கு பிரதி பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள வைத்தியர் மோகனும் அங்குள்ள ஏனைய நிருவாக அதிகாரிகளும் இப்றாலெப்பை மீண்டும் வருவார் என நம்பி ஏமாந்து போவதுடன் அரச வளங்களையும் துஸ்பிரயோகம் செய்கின்றனர்.

உதாரணமாக கடந்த திங்கட்கிழமை முன்னாள் பணிப்பாளரை கொழும்பிக்கு அழைத்துச் செல்வதற்காக அரச வாகனம் ஒன்று துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் பணிப்பாளர் இப்றாலெப்பையின் விசுவாசியாக செயற்பட்ட கணக்காளர் அமீரலி பொய்யான தகவலை கூறி பணிப்பாளரது வாகனத்தை முன்னாள் பணிப்பாளரை கொழும்புக்கு அழைத்துச்செல்ல பயன்படுத்தியுள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக முன்னாள் பணிப்பாளர் தற்போதும் பணிப்பாளர் என்ற நினைவில் சில கட்டளைகளை இட்டு வருகிறார்.

அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்ற தற்போதைய தற்காலிக பணிப்பாளர் தலையால் நடக்கிறார்.

அடுத்த கட்டட தொகுதி ஒன்றை நிர்மானிக்க வேண்டும்,10 நாட்களுக்கிடையில் பிணவறைக்கருகில் உள்ள கட்டடம் உடைக்கப்பட வேண்டும்,அதற்காக உடனடியாக அங்குள்ள விடுதியை ETU ற்கு மாற்றுங்கள்,ETU வை புதிய கட்டடத்திற்கு மாற்றுங்கள். என அவசர கட்டளையை பிறப்பித்துள்ளார்.

அதனை நிறைவேற்ற தற்காலிக பணிப்பாளர் காலில் சக்கரம் பூட்டி ஓடுகிறார்.

மட்டக்களப்பில் கடமையாற்றும் வைத்தியர்களே!,தாதியர்களே!சிற்றூழியர்களே!,ஏனைய உத்தியோகத்தர்களே!

உங்களில் ஒருவனுக்ககாவது நிருவாக நடைமுறைகள் எதுவும் தெரியவில்லையா? எல்லோரும் கூழை கும்பிடு போடுகிறீர்கள்?

உங்களுக்கு சம்பள அதிகரிப்பு வேண்டுமென்றால் மட்டுமா போராடுவீர்கள்?

இது போன்ற அரச வளத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டும் பணப்பேய்களுக்கெதிராக போராட மாட்டீர்களா?

இரும்புகளாலும், வைரமான சீமெந்து கலவைகளாலும் நிர்மானிக்கப்படவேண்டிய கட்டடங்கள் தகரங்களாலும் தண்ணீரும் மணலும் மட்டுமே சேர்ந்த கலவையாலும் கட்டப்படுவதை நீங்கள் அறியவில்லையா?

இவரால் கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள் யாவும் தரம்கெட்ட உலோகங்களால் ஆனவை என்பது உங்களுக்கு புலப்படவில்லையா?

எந்த நேரமும் நோயாளிகளை பற்றி கவலை கொள்ளாது கொடிபிடிக்கும் உங்கள் தொழில்துறையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் எங்கே?

பாவிகளா!
நீங்கள் நன்றாக பொய் கணக்கெழுதி சம்பளத்தை பெற்றுவிட்டு உண்டு,உடுத்து சமிபாடடையாத முதலைகளை போல வாழந்து விடுவீர்கள்.

இந்த வைத்தியசாலையை நம்பும் ஏழைகள் பாவமாடா…………….இந்த பாவங்கள் உங்கள் பரம்பரையின் ஆணி வேர் வரை தாக்கும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் ஊழலும்.

வாழைப்பழம் 10000/-
CIC வாழைப்பழம் 12500/-

அண்மையில் சுகாதார அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கட்டட திறப்பு விழாவும் சில கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் மிக கோலாகலமாக நடந்தேறியது.

பெருமெடுப்பிலான ஆரவாரங்கள்,பதாதைகள்,விளம்பரங்கள் என விழா களைகட்டியது.

எல்லாம் முடிந்தபின் செலவுக்கணக்கு எழுதப்பட்டது.

அக்கணக்கின்படி எவனெல்லாம் வைத்தியசாலையில் ஒப்பந்த வேலைகளில் ஈடுபடுகின்றானோ,அவனுக்கெல்லாம் திறப்பு விழா செலவில் பங்கெடுக்கும்படியும் செலவு விபரமும் அனுப்பப்பட்டது.

அவற்றுள் ஒன்றாக சிறுநீரக நோயாளிகளுக்காக நிர்மானிக்கப்படும் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டலுக்கான செலவு விபரம் முன்னாள் பனிப்பாளர் இப்றாலெப்பையால் அக்கட்டத்தை நிர்மானிக்கும் ஒப்பந்தகாரராகிய நுவானி கன்ஸ்ரக்சன் நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டது.

அதில் வாழைப்பழம. 10000/-
CIC வாழைப்பழம் 12500/-
Refreshment 12000/-
Refreshment 55000/-….
நடுகல் 99000/-…..
என விபரம் நீட்டப்பட்டு, மொத்த செலவாக 199000/- காட்டப்பட்டு அதனை வழங்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வேடிக்கை யாதெனில் குறித்த கடிதம் அனுப்பபட்டமைக்கான பிரதிகள் எவையும் அலுவலகத்தில் சேமிக்கப்படவில்லை.

இத்தனைக்கும் அந்த விழாவுக்கான அனைத்து செலவுகளையும் வைத்தியசாலையிலுள்ள நலன்புரிச்சங்கங்கள் பொறுப்பெடுத்திருந்தன.

நிலமை இவ்வாறு இருக்க ஊழல் மன்னன் முன்னாள் பணிப்பாளர் இப்றாலெப்பை ஒரு இலட்சம் ரூபாய்க்கும் திருகுதாள கணக்கெழுதியுள்ளார்.

அங்குள்ள நலன்புரிச்சங்க மக்காள்…..

ரவி,சுரேஸ்,ஜேகரன்,முரளி,குகதாஸ்,திருமால்,மோகன்……

சம்பவ தினமன்று நீங்கள் விழாவை சிறப்பிக்க படாத பாடு பட்டு இப்றாலெப்பையின் கச்சையோடு ஒட்டி உறவாடி திரிந்தீர்கள்.உங்கள் அங்கத்தவர்களின் பணங்களை வாரி இறைத்தீர்கள்.

நடந்த்தை பார்த்தீர்களா?

எப்போது நீங்கள் சரிவரப்போகிறீர்கள்?

நன்றாக பணத்தித்தில் புரண்டு எழும்பி கடந்து சென்றிருக்கிறார் இப்றா….

அவர்தான் இன்னும் வேண்டும் என்றபடி தவத்தில் நீங்கள்?

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் ஊழலும்.

ஊழல்கள் பல நடைபெற்றுள்ளன.எமக்கு கிடைத்தவற்றை ஒவ்வொன்றாக பதிவிடுகிறோம்.

காலம் தாழ்த்திய பதிவுகள்தான்.என்ன செய்வது? இப்போதுதானே எல்லாம் வருகிறது.

இப்றாலெப்பையின் நிருவாக காலத்தில் வைத்தியர்கள்,வைத்திய நிபுணர்கள்,தாதியர்கள்,பிரதி பணிப்பாளர்கள்,கணக்காளர்கள்,நிருவாக உத்தியோகத்தர் என பலரும் தம்பாட்டுக்கு பல துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது இப்றாலெப்பையின் ஓய்வுக்கு பின்பே வெளிச்சத்துக்கு ஒருகிறது.
ஒவ்வொன்றாக நாம் வெளியிட தயார் நிலையிலுள்ளோம்.தொடர்ந்து அவதானியுங்கள்.

ஊழல் 2

அண்மையில் திறந்துவைக்கப்பட்ட விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு கட்டிடத்துக்கு பெயர்பலகை பொறிக்க வேண்டியிருந்தது.

அதற்காக பலரிடம் விலைமனு கோரப்பட்டது. மட்டக்களப்பில் உள்ள ஒருவரால் அந்த வேலைகளுக்காக ரூபாய் 13,00,000/- செலவாகும் என விலை மனு வழங்கப்பட்டது.

அதனை கிழித்தெறிந்த இப்றா…இது விலை அதிகம்.இந்த வேலையை நான் பார்க்கிறேன் என கூறி காத்தான்குடியில் அல்பரா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.

அவர்கள் வேலையை சரியாக முடித்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 16,00,000/-.

எப்படி வழங்கப்பட்டது?

அந்த கட்டடத்தை நிர்மானித்த ஒப்பந்த கார்ர்களிடம் குறித்த பணத்தொகையை அல்பரா வுக்கு வழங்குமாறு இப்றாவால் கட்டளையிடப்பட்டது.

பணம் வழங்கப்பட்டது.

இதில் என்ன ஊழல்?

13,00,000/- விலை அதிகம் என்றால் 16,00,000/- விலை குறைப்போ?

மொத்த செலவு 11,00,000/- ற்குள் வந்திருக்க வேண்டும் .மீதிப்பணம் இப்றாவின் பைக்குள் இடம் மாறியிருக்க வேண்டும்.

எப்படி ஊழல்? உங்களால் முடியுமா? எந்த கொம்பனாலும் பிடிக்கமுடியாத ஊழல்.

“முடிந்தால் புடிச்சிப்பாருங்கோ.”

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts