நைல் நதியில் படகு மூழ்கி விபத்து: மாணவர்கள் பலி!

நைல் நதியில் படகு மூழ்கி விபத்து: மாணவர்கள் பலி!

நைல் நதியில் படகு மூழ்கி விபத்து: மாணவர்கள் பலி!

சூடான் நைல் நதியில் படகொன்று மூழ்கி 23 பாடசாலை மாணவர்களும் மருத்துவ அலுவலர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு சூடான் வழியாக பயணிக்கும் நைல் நதியில் பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த சுமார் 40 சிறுவர்களைக் கொண்ட குறித்த படகு, அதன் இயந்திரம் பழுதடைந்து நேற்று (புதன்கிழமை) நீரில் மூழ்கியுள்ளது.

24 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை இருவரின் சடலங்கள் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவர்கள் கல்விகற்று வந்த பாடசாலை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைக்கு மாணவர்கள் நடந்துசெல்வதே வழமை. எனினும், கடந்த காலமாக தொடர்ந்து வரும் அடைமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மாணவர்கள் மற்றும் பணிகளுக்குச் செல்வோர் படகுப்பயணத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.

தொடர்ந்தும் அடைமழை பெய்துவருவதால், தொலைபேசி இணைப்புக்கள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன.

ந்நிலையில், விபத்து குறித்த தகவலை உடனுக்குடன் பெறுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவர்கள் 7 வயது தொடக்கம் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதில் மாணவிகளே அதிகமாக காணப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts