துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு!

துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு!

துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது துப்பாக்கி சூடு!

துருக்கியில் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை இலக்குவைத்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) அதிகாலை தூதரகத்தின் முக்கிய நுழைவாயில் ஒன்றின் அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

வெள்ளை நிற கார் ஒன்றில் இருந்து, தூதரக காவல் நிலையத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த துப்பாக்கி சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், துருக்கி தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகதிற்கு ஈத் அல் ஆதா எனும் திருவிழாவினை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts