Breaking News

கிளிநொச்சியில் உயிரிழந்த யுவதி கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளர்!

கிளிநொச்சியில் உயிரிழந்த யுவதி கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளர்!

கிளிநொச்சியில் சடலமாக மீட்க்கப்பட்டவர் கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளர்!

கிளிநொச்சியில் சடலமாக மீட்க்கப்பட்டவர் கழுத்து நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாக உடற்கூறுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உடற்கூறுப் பரிசோதனைக்கான நேற்று(29.08.2018) இரவு சடலம் யாழ் அனுப்பப்பட்ட நிலையில் சற்று முன் உடற்கூறுப் பரிசோதனை நிறைவடைந்துள்ளது அவ் அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது

குறித்த அறிக்கையில் இறப்புக்கான காரணம் கயிறு ஒன்றினால் கழுத்தை நெரித்தே கொல்லப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் ஐந்து மாதக் கர்ப்பிணி எனவும் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில் கொலைசெய்யப்பட்ட அன்று அவர் வன்புணர்வுக்கு உட்ப்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இடது புற கண்ணுக்கு மேற்ப்பகுதியில் குத்தப்பட்ட உட் காயம் ஒன்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உடற்கூறுப் பரிசோதனை முடிவடைந்த நிலையில் இறுதிக் கிரிகைகளுக்காக அவரது சடலம் தந்தையாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள விசேட பெரும் குற்றப் பிரிவு குழுவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்

அதன் அடிப்படையில் குறித்த பெண் பயன்படுத்திய கைத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் பொலிசாரால் சந்தேக நபர்களாக கணிக்கப்பட்டுள்ளவர்களின் கைத்தொலைபேசியின் தரவுகள் மற்றும் பொலிசாருக்கு தேவையான இடங்களில் உள்ள கண்காணிப்புக் கமராக்களின் பிரதியினைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதியினை இன்று(30.08.2018). கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts