Breaking News

ஆப்கானிஸ்தான் அரசாங்க அலுவலகத்தில் தாக்குதல்: 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் அரசாங்க அலுவலகத்தில் தாக்குதல்: 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் அரசாங்க அலுவலகத்தில் தாக்குதல்: 15 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத்தில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் அகதிகள் நலவாழ்வு மையத்தில் வெளிநாட்டிலிருந்து நிதியளிப்பவர்கள் மற்றும் உள்நாட்டு அதிகாரிகளுக்கு இடையேயான ஆலோசனைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இடம்பெற்ற அரசாங்க அலுவலகத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள், பலரை பணயக்கைதிகளாக சிறைப்பிடித்தனர்.

அதனைத்தொடர்ந்து அங்குவந்த இராணுவ அதிரடிப்படையினர் பணயக்கைதிகளை மீட்கவே தாக்குதலை மேற்கொண்டதாக அந்த மாகாணத்தின் அரசாங்க ஊடகத்தொடர்பாளர் Attaullah Khogyani தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் 14 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலைத் தொடர்ந்து குறித்த அலுவலகத்திற்குள் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாமெனக் கருதி வீரர்கள் தீவிர சோதனை நடத்தியாதகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயங்கரவாத அமைப்புக்கள் எதுவும் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்காத நிலையில் தாக்குதலை நடத்தியது யாரென்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts