Breaking News

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நால்வர் பலி!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளதோடு, 10 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புளோரிடா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஜாக்சன்வில் நகரில் மதுபான விடுதிகள் அதிகம் உள்ளன.

இதனால், வார விடுமுறை தினங்களில் அங்கு அதிகளவான கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

அதைப்போல அந்த நகரில் உள்ள ஜாக்சன்வில் லேண்டிங் எனும் வணிக வளாகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீடியோ கேம் (video game) விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இந்த விளையாட்டில் பலர் போட்டியாளர்களாகவும், பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.

அப்போது அடையாளம் தெரியாத ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் வரையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புளோரிடா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டேவிட் காட்ஜ், என்ற 24 வயதான இளைஞனே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஜாக்சன்வில் நகர தலைமை பொலிஸ் அதிகாரி செரீப் மைக் அறிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களின் உடல் நிலை தேறி வருவதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற விடுதி முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விடுதியை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, விளையாட்டில் பங்கேற்ற இளைஞன் தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் குறித்த இளைஞன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறியுள்ளார்.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts