யாழ் சிறைச்சாலையில் மோசமாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ் சிறைச்சாலையில் மோசமாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ் சிறைச்சாலையில் மோசமாக நடத்தப்பட்ட மாற்றுத்திறனாளி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நீதி மன்றின் விளக்க மறியல் உத்தரவுக்கு அமைய யாழ் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளிநொச்சி அலுவலகத்தில் முறை்பபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்

முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்ட குமாரசாமி பிரபாகரன் எனும் ( இடுப்புக்கு கீழ் இயங்காத) மாற்றுத்திறனாளியான தனக்கு சிறைச்சாலையில் அதற்குரிய எவ்வித ஏற்பாடுகளும் காணப்படவில்லை எனறும் மலம் சலம் கழிக்க முடியாது தான் பெரும் அவஸ்த்தைப்பட்டதாகவும் இது தனது உரிமையை பாதித்துள்ளது எனவும் தெரிவித்தே முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய ஆணையாளர் கனகராஜ் அவர்களுடன் தொடர்பு கொண்டு வினவிய போது குமாரசாமி பிரபாகரன் என்பவரின் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், அது தொடர்பிலும், மற்றும் அரச, பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய அணுகும் வசதிகள் காணப்படுகின்றதா என்பது பற்றியும் கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts