பணம் கொடுத்தால் சட்டத்தையே மாற்றும் போக்குவரத்து பொலிஸ்!

பணம் கொடுத்தால் சட்டத்தையே மாற்றும் போக்குவரத்து பொலிஸ்!

பணம் கொடுத்தால் சட்டத்தையே மாற்றும் இலங்கை  போக்குவரத்து பொலிஸ்!

இலங்கை   போக்குவரத்து பொலிசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்டத்தையே மாற்றுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது

 

இலங்கை வடபகுதி  கிளிநொச்சி முருகானநதா கல்லூரிக்கு அண்மையில் பாதுகாப்புக் கடமைக்காக நின்ற கிளிநொச்சி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிசார் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சென்ற ஒருவரை இடைமறித்துள்ளனர்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி பயணித்தால் நீதிமன்றம் செல்லவேண்டும் இதற்கு கூடிய அளவு பணம் செலுத்த வேண்டும் என நீண்டநேரம் மறித்து வைத்திருந்த குறித்த பொலிசார்

உங்களுக்கு ஒரு உதவி மட்டும் செய்யலாம் ஆயிரம் ரூபாய் காசு தாருங்கள் வேறு ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு சிறிய குற்றம் ஒன்றை எழுதித்தருவதாக தெரிவித்துள்ளனர்

பின்னர் ஆயிரம் ரூபாயினைப் பெற்றுக்கொண்ட குறித்த பொலிசார்   சாரதியின் நண்பர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு தாலைக்கவசம் இன்றிப் பயணித்தமை என்று 500 ரூபாய்க்கான போலி குற்றச்சாட்டினை எழுதி உள்ளனர்

இவ்வாறு பொலிசார் பணம் பெற்றுகொண்டே பாரிய குற்றச் செயல்களுக்கும் உடந்தையாக உள்ளனர்

பரந்தன் சந்தியில் இருந்து வெளிகண்டால் பாலம்வரையான பிரதான வீதியில் கடமையில் நிற்கின்ற போக்குவரத்துப் பொலிசார் குறித்த பகுதிகளில் மட்டும் நாள் ஒன்றுக்கு பலரிடம் இலஞ்சம் வாங்குவதாக பிரதேச வாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்

அத்துடன் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது பயணித்தவரின் நண்பரின் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு இலஞ்சம் வாங்கிக்கொண்டு தண்டம் எழுத்து காட்சி கையடக்கத் தொலைபேசிக் கமராவில் பதிவாகயுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடக்கு மாகாண செய்தியாளர் -சேந்தன் 

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts