இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்ட ரம்யா! என்ன நடந்தது!

இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்ட ரம்யா! என்ன நடந்தது!

இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப்பட்ட ரம்யா!! : அதிர்ச்சியில் உறைந்துபோன போட்டியாளர்கள்!!! (பிக்பாஸ் சீசன் 2 : 35ம் நாள்!!- வீடியோ)

• உங்க எவிக்‌ஷன் நடைமுறை நேர்மையா இல்லை பிக் பாஸ்… கடும் கண்டனங்கள்!

நேற்று, கமல் முன்னால் சண்டையிட்டு போட்டியாளர்கள் அதிர்ச்சியளித்த விஷயத்தைப் போலவே இன்றைய தினத்தின் அதிர்ச்சி ‘ரம்யாவின் வெளியேற்றம்’ மூலமாக பார்வையாளர்களுக்கு கிடைத்தது.

‘எவருமே யூகிக்க முடியாத திரைக்கதையை எழுதுகிறேன்‘ என்பது போல் ‘பிக் பாஸ் திருவிளையாடல்’ எவ்வித தர்க்கமும் இல்லாத அபத்தமான திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

கடந்த வாரத்தில் நித்யா வெளியேற்றப்பட்டதை எவருமே எதிர்பார்த்திருக்க முடியாதிருந்ததைப் போலவே இந்த வாரம் ரம்யா வெளியேற்றப்பட்டதும் எவரும் எதிர்பாராத திருப்பமே.

பிக்பாஸ் வீட்டிலேயே இதற்கான அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. குறிப்பாக, ‘தாம்தான் வெளியேற்றப்படுவோம்’ என்று எதிர்பார்த்திருந்த பாலாஜியின் முகத்தில் திகைப்பு வெளிப்படையாக தெரிந்தது.

மக்கள் அளிக்கும் வாக்குகள் மதிக்கப்படுகிறதா அல்லது பிக்பாஸ் குழு தங்களின் வணிக உத்திகளுக்கேற்ப முன்னமே தீர்மானித்தைத்தான் ‘மக்களின் தீர்ப்பு’ என்கிற பாவனையில் வெளியிடுகிறதா என்கிற வழக்கமான சந்தேகம் இம்முறை அழுத்தமாக உருவாகியது.

எவிக்ஷன் பட்டியலில் இருந்த இதர போட்டியாளர்களோடு ஒப்பிடும்போது எவ்வித சர்ச்சையிலும் ஈடுபடாதவர், ரம்யா. பொறுமையும் பக்குவமும் நிறைந்தவர்.

தன்னுடைய நெருக்கமான தோழியான வைஷ்ணவி மீது பிழை என்றால்கூட அதை வெளிப்படையாக சொல்லக்கூடிய நேர்மைக்குணம் உள்ளவர்.

எந்தவொரு பிரச்னையிலும் நியாயத்தின் பக்கம் நிற்பவர். மற்றவர்களின் குறைகளை நட்பு கலந்த குரலில் நிதானமாக எடுத்துரைப்பவர்.

இவர் வீட்டின் தலைவியாக இருந்த சமயத்தில், போலீஸ்-திருடன்-பொதுமக்கள் விளையாட்டை பாதியிலேயே கைவிட்டது பிழையானதுதான்.

ஆனால், இதை விடவும் அதிக சதவீத பொறுப்பற்ற தன்மையுடன் இயங்கிய மஹத் போன்றவர்கள் எல்லாம் போட்டியில் நீடிக்கும்போது ரம்யா வெளியேற்றப்படுவது அநீதி.

ஒருவகையில் அவருடைய நல்லியல்புகளே அவரது வெளியேற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். இவரால் எவ்வித பரப்பரப்பான ஃபுட்டேஜ்களும் கிடைக்காது என்று ஒருவேளை தீர்மானித்த பிக்பாஸ் குழு இந்த வெளியேற்றத்தை வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம்.

‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்கிற பழமொழியைப் போல் ஆகி விட்டது, ரம்யாவின் வெளியேற்றம்.

‘பொய்யும், புறம் பேசுதலும், சண்டையும் நிகழும் எதிர்மறையான சூழலில் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது’ என்கிற ரம்யாவின் குணாதிசயத்தையொட்டி, இந்த வெளியேற்றம் ஒருவகையில் அவருக்கு விடுதலையே.

 

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts