2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன?

2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன?

2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடிக்க காரணம் என்ன?

2009 ஆம் ஆண்டு வரை யுத்தம் நீடித்தமை எவ்வாறு என அறிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாபிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சமுகம் தாம் கண்டவற்றையும், கேள்விப்பட்டதையும் தவிர இலங்கையின் பல பகுதிகளில் நடந்தவற்றைப்பற்றி கவனம் செலுத்தவில்லை எனவும் ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளினதும் உறுதியான அபிப்பிராயம் கடந்த 2004 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்திருக்க வேண்டும் என்பதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, 2004 ஆம் அண்டு தொடக்கம் 2009 வரை யுத்தம் நீடித்ததமைக்கான காரணத்தை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

ஆகவே அமெரிக்காவை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இதன் போது அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts