வறுமை, போர்: உலகில் பாதி சிறுவர்களுக்கு அச்சுறுத்தல்!

வறுமை, போர்: உலகில் பாதி சிறுவர்களுக்கு அச்சுறுத்தல்!

வறுமை, போர்: உலகில் பாதி சிறுவர்களுக்கு அச்சுறுத்தல்!

ஏழ்மை, பாலின பாகுபாடு, போர் ஆகியவை, உலகத்தின் பாதிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக சிறுவர்களை பாதுகாப்போம் அமைப்பின் அண்மைய ஆய்வு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில், குழந்தைத் தொழிலாளிகள், கல்வியின்மை, பாலர் பருவத் திருமணம் போன்றவற்றின் அடிப்படையில், 175 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் குறைந்தது ஒரு பிரச்சினையை, உலகெங்கும் 1.2 பில்லியன் சிறுவர்கள் எதிர்நோக்குவதாக ஆய்வு குறிப்பிட்டது.

சிறுவர்களுக்கான தரநிலையில் மிக மோசமான நாடுகள் என அடையாளம் காணப்பட்டவற்றில் பத்தில் எட்டு, மேற்கு, மத்திய ஆபிரிக்க நாடுகளாகும். பட்டியலில் நைகர் முதலிடத்தில் உள்ளது.

சிங்கப்பூரிலும், ஸ்லோவேனியாவிலும் மிகக் குறைவான மிரட்டல் சம்பவங்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் சிறப்பான ஆரம்பத்தை கொண்டிருக்க, அரசாங்கங்கள் பாடுபடவேண்டும் என்று அமைப்பின் தலைமை நிர்வாகி ஹெல் தோர்னிங் ஷிமிட் கூறினார்.

தென் சூடான், சோமாலியா, யெமன், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சுமார் 20 நாடுகளில் வசிக்கும் 153 மில்லியன் சிறுவர்கள் மூன்று வித அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்குவதாக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts