Breaking News

மலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் சபை !

மலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் சபை !

மலிங்கவுக்கு எச்சரிக்கை விடுத்த கிரிக்கெட் சபை !

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க மாகாண மட்டத்திலான சுப்பர் ப்ரொவின்சியல் 50 ஓவர்கள் கொண்ட தொடரில் பங்கேற்காவிடின் தேசிய அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படாது என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உடற்தகுதி குறைபாடு மற்றும் ஆட்டத்தில் சிறப்பை வெளிப்படுத்தாமை ஆகிய காரணங்களினால் அண்மைக்காலமாக மாலிங்கவிற்கு இலங்கை அணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ள 50 ஓவர்கள் கொண்ட மாகாண மட்டத்திலான தொடரில் மாலிங்க தம்புள்ளை அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் நடைபெற்றுவரும் 11ஆவது ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் பந்து வீச்சு ஆலோசகராக மாலிங்க செயற்பட்டு வருவதன் காரணமாக இலங்கை உள்ளூர் தொடரில் அவர் விளையாடுவது கேள்விக்குறியாகி விட்டது.

இந்தநிலையில்,

“தற்போதைய மாகாண மட்டத் தொடரில் மாலிங்க விளையாடி தனது உடல் தகுதியினை நிரூபிக்க வேண்டியது அவசியம் எனவும், அவ்வாறு நிரூபித்தால் மாத்திரமே அவருக்கு இலங்கை அணியில் வாய்ப்புகள் வழங்குவது தொடர்பாக ஆராயப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும், ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வீரராக இருந்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கலாம்.

எனினும் பின்வரிசையில் அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பவராக மாலிங்க இருக்கும் நிலையில் அவர் உள்ளூர் போட்டிகளை ஒதுக்குவதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய ஆட்டத்திறன் மற்றும் உடற்தகுதியை வெளிப்படுத்தினால் மாத்திரமே தேர்வாளர்கள் அவரை இலங்கை அணியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்துவார்கள் எனவும் மாலிங்கவிற்கு இலங்கை கிரிக்கெட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts