தூத்துக்குடியில் 11 பேரின் உயிரை குடித்த துப்பாக்கி இதுதான்!

தூத்துக்குடியில் 11 பேரின் உயிரை குடித்த துப்பாக்கி இதுதான்!

தூத்துக்குடியில் 11 பேரின் உயிரை குடித்த துப்பாக்கி இதுதான்!

அதிகாரங்களின் குறி எப்போதும் கால்களை நோக்கி இருப்பதில்லை; சிந்திக்கிற மூளையை நோக்கியே இருக்கும்; அவர்களின் கையில் இருக்கிற துப்பாக்கிகளும் அப்படியே!

போராட்டங்களை, கலவரங்களை அடக்க, துப்பாக்கிச் சூடு நடத்த 303 -ரகத் துப்பாக்கிகளையே தமிழ்நாடு காவல்துறையில் பொதுவாகப் பயன்படுத்துவார்கள்.

இந்தத் துப்பாக்கியிலிருந்து ஒரு சமயத்தில் ஒரு குண்டுதான் வெளிப்படும். இதனால், உயிரிழப்பும் குறைவாகவே இருக்கும்.

ஆனால், தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி 303 ரகத் துப்பாக்கி இல்லை; இந்த விஷயம் கலவரம் தொடர்பான புகைப்படங்களைப் பார்க்கும்போதே தெளிவாகத் தெரிகிறது.

தூத்துக்குடியில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பற்றி தூத்துக்குடியில் இருக்கிற பெயர் சொல்ல விரும்பாத அதிவிரைவுப் படை காவலரிடம் கேட்டதற்கு, நேற்று பயன்படுத்தியது 303 ரைபிள் என்கிறார்.

ஆனால், புகைப்படத்தில் இருக்கும் துப்பாக்கிக்கும் Lee–Enfield 303 துப்பாக்கிக்கு அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன.

பொதுவாகத் தமிழக போலீசார் கலவரங்களை கட்டுக்குள் கொண்டு வர, வானை நோக்கிச் சுடுவதற்கு 303 ரைபிளைத்தான் பயன்படுத்துவார்கள்.

303 துப்பாக்கியானது 1904-ம் ஆண்டு பிரிட்டனில் பயன்படுத்தப்பட்டது. 303 ரக துப்பாக்கியால் ஒரு நிமிடத்திற்கு 20 குண்டுகளிலிருந்து 30 குண்டுகள் வரைதான் சுட முடியும்.

அதற்கு ஒவ்வொரு முறையும் துப்பாக்கியில் ஒவ்வொரு குண்டாக நிரப்ப வேண்டும். இந்த வகை துப்பாக்கிகள் போல்ட் மூலமாகக் குண்டுகளை வெளியேற்றும்.

இந்தத் துப்பாக்கி 503 மீட்டரில் இருந்து 2743 மீட்டர்கள் வரை துல்லியமாக சுடும். ஆனால் நேற்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது இந்த வகை துப்பாக்கி மாதிரி தெரியவில்லை.

தூத்துக்குடியில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி Rifle 7.62 mm 1A1 (Self-Loading Rifle) ரகத்தைச் சேர்ந்தது போல தெரிகிறது.

இந்தத் துப்பாக்கியில் உள்ள மேகஸினில்(Magazine) ஒரே சமயத்தில் 20 முதல் 30 குண்டுகளை லோடு செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இதனால், அடுத்தடுத்து சுட்டுக்கொண்டேபோகலாம். இதுபோன்ற துப்பாக்கிகளைப் பொதுவாக பொதுமக்கள்மீது பயன்படுத்துவதில்லை.

புகைப்படத்தில் இருக்கிற துப்பாக்கி L1A1 SLR (Self-Loading Rifle) வகையைச் சார்ந்தது.

இந்தத் துப்பாக்கி 1954-ம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. பல நாடுகளிலும் இந்தத் துப்பாக்கி பல்வேறு மாறுதல்களுடன் செய்யப்பட்டு  பயன்பாட்டில் இருக்கிறது.

இந்தத் துப்பாக்கியின்  உரிமம் பெற்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கித்தான்  Rifle 7.62 mm 1A1 நேற்றும் இன்றும் தூத்துக்குடி சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டது இந்தத் துப்பாக்கிதான்.

இந்தத் துப்பாக்கியிலிருக்கிற குண்டுகள் துப்பாக்கியின் சேம்பரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற  கேஸ் பிரஷர் உதவியுடன் வெடிக்கிறன.

குண்டுகள் 800 மீட்டர் தூரத்திற்கு துல்லியமாகச் சென்று இலக்கைத் தாக்க கூடியது.

1143 மில்லி மீட்டர் நீளம் கொண்ட துப்பாக்கியின் எடை 4.300 கிலோ. பொதுவாக இந்தியாவில் மத்திய ஆயுதப்படை பிரிவில் 1A1 துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது.

பல ஆண்டுகளாக  இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் இருந்த 1A1 துப்பாக்கிக்குப் பதிலாக இப்போது இன்சாஸ் (INSAS)   5:56MM  அசால்ட் ரக துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது.

Rifle 7.62 mm 1A1 இந்தத் துப்பாக்கி திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் (Ordnance Factories Board) தயாரிக்கப்பட்டது.

ஒரு வாரத்திற்கு 750 துப்பாக்கிகளை இங்கே தயாரிக்கிறார்கள். 1A1 இப்போது வரை மத்திய ஆயுதப்படையில் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு முறை லோட் செய்யப்பட்ட துப்பாக்கியிலிருந்து 30 முறை சுட முடியும். இருப்பதிலிருந்து முப்பது குண்டுகள் வரை அசால்ட்டாக  துப்பக்கூடிய துப்பாக்கி 1A1.

யார் கையில் வேண்டுமானாலும் துப்பாக்கிகள் இருக்கலாம் ஆனால் அதன் அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது மக்களின் பாதுகாப்பு.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts