ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம்!

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம்!

ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க விருப்பம்!

மலையாள படத்தின் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் ரீமா கல்லிங்கல். இவர் தமிழில் யுவன் யுவதி என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார்.

தற்போது தமிழ் படங்கள் நடிப்பது அரிதாகிவிட்டாலும் கூட வழங்கப்படும் கதாபாத்திரங்களால் நடித்து வருகின்றார் ரீமா.

இந்நிலையில் மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டு குவிவதால் ரீமாவுக்கும் அதே போல் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரீமா கல்லிங்கல் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவருகிறார்.

மேலும், ஜெயலலிதா இறப்புக்கு பின் அவரது வாழ்க்கையை படமாக்க சிலர் முயற்சிக்கிறார்கள்.

ஆனால் ஜெயலலிதா முகசாயல் கொண்ட நடிகை கிடைக்காமல் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts