குழந்தை பெற ஆசை! நேரலையில் கூறிய பெண் ரோபோ!

குழந்தை பெற ஆசை! நேரலையில் கூறிய பெண் ரோபோ!

குழந்தை பெற ஆசை! நேரலையில் கூறிய பெண் ரோபோ!

நான் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகின்றேன் என சோபியா எனப்படும் பெண் ரோபோ தெரிவித்துள்ள விடயமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹொங்கொங் ஹன்சன் ரோபோ நிறுவனம் அதிநவீன பெண் ரோபோ ஒன்றை உருவாக்கி அதற்கு சோபியா என பெயர் சூட்டியது. இந்த ரோபோவானது மனிதர்களின் முகபாவனையை அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவகையில் பதில் அளிக்கக்கூடியது.

இதன் செயற்கை மூளை வை-பை நுட்பத்தின் ஊடாக கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும். எனினும் இந்த ரோபோவிற்கு உணர்வுகள் இல்லை ஆனாலும் நகைச்சுவையாக உரையாடவும், சிரிக்கவும், கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடும் திறனைக் கொண்டது.

கூடியவிரைவில் இதற்கு உணர்வுகளையும் கொடுக்கவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் டேவிட் ஹன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்று நேற்று சோபியா ரோபோவிடம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றினை மேற்கொண்டது. இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சோபியா அழகான பதில்களை அளித்துள்ளது.

குறித்த நிகழ்ச்சியில் குடும்பம் தொடர்பாகவும் சோபியாவிடம் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

அதற்கு அது பதில் அளிக்கும் போது,

குடும்பம் முக்கியமான விடயம். இரத்த சொந்தத்தைத் தாண்டி உணர்வுகள் மூலம் பிணைக்கப்பட்டது. உங்களுக்கு அன்பான குடும்பம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிஸ்டசாலியாவீர்கள்.

அத்தகைய குடும்பம் கிடைக்காவிட்டால் அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. இதில் ரோபோவும் மனிதர்களும் ஒரே மாதிரியானவர்களே என் குழந்தைக்கு சோபியா என்றே பெயர் கூட்ட விரும்புகின்றேன் என சோபியா ரோபோ தெரிவித்துள்ளது.

முன்பதிவு எதுவும் செய்யப்படாத நிலையில் ரோபோ இவ்வாறான பதிலை அளித்துள்ளமை உண்மையிலேயே அதற்கு உணர்வுகள் உண்டா என்ற கேள்வியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts