இரவு 9 மணிவரை புலிகளின் தங்கம் தேடி ஆமை மாட்டியது!

இரவு 9 மணிவரை புலிகளின் தங்கம் தேடி ஆமை மாட்டியது!

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் தொடர்பில் அகழ்வு பணிகள் நேற்று வியாழக்கிழமையும்  முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செய்வாய்க்கிழமை குறித்த பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலை அண்மித்த பகுதியில் விடுதலை புலிகளால் தங்கம் புதைக்கப்பட்ட இடம் என தெரிவித்து சுமார் 5 மணிநேரம் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற பதிவாளர், கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது எவ்வித பொருட்களும் மீட்கப்படாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மீண்டும் மன்றின் அனுமதியுடன் பொலிசார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் இரவு 9 மணிவரை முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பிணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பெக்குா இயந்திரம் பழுதடைந்தநிலையிலும், எவ்வித பொருட்களும் கிடைக்காத நிலையிலும் கைவிடப்பட்டது.

எனினும் அகழ்வின்போது அகற்றப்பட்ட மண் மீண்டும் அதிகாலை 4 மணியளவிலேயே மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது ஆமை ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அருகிலிருந்த நீரோடையில் விடப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts