அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சித்த கனடா பிரதமர்!

அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சித்த கனடா பிரதமர்!

அமெரிக்க அதிபரை கடுமையாக விமர்சித்த கனடா பிரதமர்!

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளையடுத்து அந்நாட்டு ஜனாதிபதியை கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ரூடோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“முன்பு அமெரிக்கா, கனடாவுக்கும் மெக்சிகோவுக்கும் உலோக வரிகளில் விலக்கு அளித்திருந்தது.

தற்போதோ அது கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீலுக்கு 25 சதவிகிதமும் அலுமினியத்திற்கு 10 சதவிகிதமும் வரி விதித்துள்ளது.

அடிப்படை அறிவுடனாவது அவர்கள் செயல்படுவார்கள் என்று எண்ணினோம், ஆனால் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கை அவ்வாறு இல்லை.

வரிகளை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்வோம் என்று அவர் கூறியிருந்தாலும் அமெரிக்கா இதுவரை தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே நிற்கிறது.

கனடா நல்லெண்ணத்துடனேயே பேச்சு வார்த்தைகள் நடத்தியது, ஆனால் ஒரு அளவுக்கு மேல் போனால் நீங்கள் எங்கள் முகத்தில் குத்தினால் நாங்கள் திருப்பிக் குத்துவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை அனைத்து நாடுகளுடனும் இன்முகம் காட்டி வந்த கனடா பிரதமரின் இந்த உறுதியான செயல்பாட்டிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், கனடா ஒட்டாவா பல்கலைக்கழக பேராசிரியரான Patrick Leblond, பிரதமரது நடவடிக்கை வரும் தேர்தலில் அவருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்வதற்கு, Share

About The Author

Related posts