தமிழகத்தில் இலங்கையர் ஒருவரும், 2 புதல்வர்களும் சடலங்களாக மீட்பு!

தமிழகத்தில் இலங்கையர் ஒருவரும், அவரின் இரண்டு புதல்வர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஹபீப் ரஹ்மான் எனப்படும் 38 வயதுடைய இலங்கையரும், அவரின் 4 மற்றும் 6 வயது புதல்வர்களுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என ரைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவித்துள்ளது.

சென்னை மதுரவோயல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அவர்கள் நேற்றைய தினம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நேற்று வரை அவர்கள் தங்கியிருந்த வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது.

அயலவர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது, வீட்டினுள் சடலங்கள் கிடப்பதை அவதானித்து காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சடலங்கை மீட்ட காவல்துறையினர், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஹபீப் ரஹ்மான் என்ற குறித்த இலங்கையர் தமது இரு புதல்வர்களுக்கும் நஞ்சூட்டிவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்வதற்கு