தனியார் கல்வி நிறுவனங்களில் இளம்பெண்களின் புகைப்படங்களுடன் கூடிய பனர்கள்…

இன்றைய 2018.08.05 சன்டே டைம்ஸ் பத்திரிகையின் பிரகாரம்(செய்தி கீழ் இணைக்கப்பட்டுள்ளது)

மொரட்டுவ பகுதியில் தனியார் கல்வி நிறுவனங்கள்,ஆசிரியர்களின் திருவுருவ படங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும் டிஜிட்டல் பனர்களையும் கண்டபடி_ சகட்டுமேனிக்கு பொது இடங்களில் ஒட்டியும் கட்டியும் தமது அகத்தின் அழகின்மையை வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

இந்தவகையில் வடபுலத்திலும் கிளிநொச்சி தொடக்கம் யாழ்ப்பாணம் வரை உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள்,மாணவிகளின் (இளம்பெண்களின்)புகைப்படங்களுடன் கூடிய பனர்களை தமது சுய வியாபார தேவைகளுக்காக பொதுஇடங்களில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன

மொரட்டுவ நகரசபை எதிர்கட்சி தலைவர் திரு சேனக்க தமயந்த,தனது மொரட்டுவ நகர சபையில் இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அத்தீர்மானத்தின்படி தனியார் கல்வி நிறுவனங்கள் தான்தோன்றிதனமாக செயற்படுவதை தடுத்து நிறுத்தமுடியும் என்று கருதுகிறார்.

மொரட்டுவ நகரபிதா சமன் லால் பெர்னான்டோ தமது முதல் நடவடிக்கையாக இது தொடர்பில் சமந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி தனியார் கல்விநிறுவனங்கள் காணப்படும் பிரதேச சபைகள் இதில் தலையிட்டு,பிரதேச சபை தலைவர்களும் ,எதிர்கட்சியினரும் பொதுஇடங்களில் இளம் பெண்களின் புகைப்படங்களை தமது குறுகிய “வியாபார” நோக்கத்திற்காக சமூக கடப்பாடுகளை மீறி காட்சிபடுத்தும் இத்தகைய பனர் கலாச்சாராத்துக்கு எதிராக என்னதான் செய்ய போகின்றனரோ

பகிர்வதற்கு