சற்றுமுன் வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு!

வவுனியா குட்செட் வீதியில் 1 ஒழுங்கையில் உள்ள வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாயின் அரவனைப்பிலிருந்த 8 மாத ஆண்குழந்தையான வானிஷன் எனும் குழந்தையை கடந்த (31.05.2018) அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளை வேன் ஒன்றில் வந்த நபர்கள் கடத்திச் சென்றனர்.

இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று (02.06.2018) மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸார் குழந்தையினை கடத்தியவர்களை கைது செய்துள்ளதுடன் குழந்தையும் மீட்டேடுத்துள்ளனர்.

தற்போது வவுனியா பொலிஸார் மற்றும் குழந்தையின் தாயார் புதுக்குடியிருப்பு நோக்கி சென்றுள்ளனர்.

பகிர்வதற்கு