கிளிநொச்சி ஏ 9 வீதியில் விபத்து இருவர் பலி!

கிளிநொச்சி ஏ 9 வீதி இயக்கச்சி பகுதியில் வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மின்சாரசபையின் வாகனத்தில் கொழும்பு விமானநிலயத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கயஸ் வாகனம் நிறுத்திவைக்கப்பட்ட மின்சாரசபையின் வாகனத்தின் பின்பகுதியில் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

விமானநில்யத்தில் இருந்து கயஸ் ரக வாகனம் வெளிநாட்டில் இருந்து வந்த 8 பேரை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வேளையில் இயக்கச்சி ஏ 9 வீதியில் மின்கம்பங்களுடன் மின்சாரசபையின் வாகனத்தின் பின்பகுதியில் விபத்துக்குள்ளாகியது.

இவ் விபத்தில் கயஸ் ரக வாகனத்தில் வந்த 8 பேரும் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் கொண்டு சென்ற ஒருவரும் கிளிநொச்சி கொண்டு சென்ற ஒருவரும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்கள் ஆறு பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிஸார் மேட்கொண்டு வருகிறார்கள்.

கிளிநொச்சி ஏ 9 வீதியில் விபத்து இருவர் பலி!

 

பகிர்வதற்கு