உதைபந்துக் கம்பம் சரிந்து வீழ்ந்ததில் கிளிநொச்சி மாணவன் பலி !

கிளிநொச்சி மத்தியமகா வித்தியாலய மாணவன் ஒருவர் இன்று பிற்பகல் உதயநகர் பகுதியில் உள்ள மைதானத்தில் உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விபயிலும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இறப்பு குறித்த விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

பகிர்வதற்கு