இன்றைய ராசிபலன் 06.08.2018

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.

வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள்.

பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும்.நினைத்ததை முடிக்கும் நாள்.

கன்னி

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார்.மகிழ்ச்சியான நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும்.பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயார் ஆதரித்துப் பேசுவார்.

வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

தனுசு

தனுசு: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.

மகரம்

மகரம்: பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். சொந்த-பந்தங்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.

வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். புதுமை படைக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

பகிர்வதற்கு