இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது!

இனி யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாதென, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டுமென, சட்டப்பேரவையில் நேற்று (திங்கட்கிழமை) எதிர்க்கட்சிகள் எழுப்பிய கூச்சலுக்கே, முதல்வர் மேற்படி பதில் வழங்கினார்.

மேலும் சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின்,

“துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை ஒருகோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.

ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப்பெற வேண்டும்.

தற்போது தூத்துக்குடியில் வீடுவீடாக சென்று பொலிஸார் முன்னெடுத்துவரும் கைது நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அத்துடன் ஆலைக்கு கொடுக்கப்பட்டிருந்த அனைத்து அனுமதியும் ரத்து செய்யப்பட்டு, ஆலை இயங்காதவாறு அனைத்து நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

பகிர்வதற்கு